அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

திருமணம் செய்வதாகக் கூறி மாணவியை அழைத்துவந்து விபசாரத்தில் ஈடுபடுத்திய இளைஞர் கைது


மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துவந்து அவரை கண்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், இந்த இளைஞருடன் இந்த மாணவியையும் விடுதி உரிமையாளரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது தொடர்பில் கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கம்பஹாவைச் சேர்ந்த 18 வயதான மாணவியே இவ்வாறு அழைத்துவரப்பட்டதாகவும் இவர் அடுத்த வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவி எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவி மேலதிக வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் எனக் கூறி சுமார் 10,000 ரூபாவை பெற்றோரிடம் இருந்து பெற்றுக்கொண்டு இந்த இளைஞருடன் கண்டிக்கு வந்ததாகவும் இந்த இளைஞர் இந்த மாணவியை விடுதியில் தங்கவைத்து பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் பொலிஸார் கூறினர். இந்த இளைஞர் மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் மகன் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். மாணவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG