அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

காலஞ்சென்ற திருமதி மார்க்கண்டு தங்கப்பொன்னுக்கு அமைச்சர் இறுதி அஞ்சலி!

கா லஞ்சென்ற திருமதி மார்க்கண்டு தங்கப்பொன்னுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் (11) சென்ற அமைச்சர் அவர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

காலஞ்சென்ற திருமதி மார்க்கண்டு தங்கப்பொன்னு அவர்கள் தனது 82 வது வயதில் நேற்றைய தினம் காலமானார். இறுதிக்கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளன.



0 கருத்துகள்:

BATTICALOA SONG