அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

புகலிடம் கோரும் 67 தமிழர்களுடன் பயணித்த படகு கொக்கோஸ் தீவைச் சென்றடைந்தது


புகலிடம் கோரும் 67 தமிழர்களுடன் பயணித்த படகொன்று இறுதிவரை பிடிபடாமல் கொக்கோஸ் தீவைச் சென்றடைந்துள்ளது. இது உள்நாட்டு நேரப்படி முற்பகல் 8 மணிக்கு கரைக்கு அண்மையில் வந்ததாக நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார்.
கரையிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் தரித்துநின்ற படகிலிருந்து இறங்கி 4 பேர் கரைக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் பயணிகளுடன் காணப்பட்ட படகை பாதுகாப்பாக கரைக்கு கொண்டுபோய் சேர்த்தனர். இவர்கள் விரைவில் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்படவுள்ளனர். முதல் நாள் இரவு புகலிடம் கோரும் 28 பேருடன் வந்த படகொன்று கொக்கோஸ் தீவுக்கு மேற்கில் பிடிபட்டுள்ளது. இதேசமயம் கிறிஸ்மஸ்தீவுக்கு வடக்கின் 28 பேரை ஏற்றிவந்த படகொன்று பிடிபட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG