அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 21 ஜூலை, 2012

பனை அபிவிருத்தி சபையினது மேம்பாடு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு

னை அபிவிருத்தி சபையினது மேம்பாடு தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடிள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கண்டி வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையினது தலைமைக் காரியாலய கேட்போர் கூட்டத்தில் இன்றையதினம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது எதிர்காலத்தில் பனை அபிவிருத்தி சபையை மென்மேலும் விருத்தி செய்வது மற்றும் மேம்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

பனை அபிவிருத்தி சபையின் கீழான நிலையங்கள் ஊடாக பனைசார் உற்பத்திகளை குறிப்பாக உணவு மற்றும் உணவில்லாத பொருட்களை துறைசார்ந்தவர்கள் ஊடாக மேம்படுத்துவது அவற்றின் சந்தை வாய்ப்பினை உயர்த்துவது உற்பத்திகளை காலத்திற்கேற்ற முறையில் நவீனமயப்படுத்துவது போன்ற விடயங்களில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இவைதவிர பனை அபிவிருத்தி சபையினது அலுவலகச் செயற்பாடுகளை கணினிமயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இவை தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் துறைசார்ந்த உத்தியோகத்தர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டதுடன் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார். இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் பொது முகாமையாளர் லோகநாதன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.







0 கருத்துகள்:

BATTICALOA SONG