அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஜூலை, 2012

இந்து மதக்குருமார்களின் நல மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்

ந்து மதக்குருமார்களின் நல மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சர்வதேச இந்துமத பீடத்தின் குருமார்கள் சந்தித்து கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த குருமார்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.[படம் இணைப்பு ]


அண்மையில் உபநயனம் பெற்ற ஜெயபூஜிதன் சர்மா மற்றும் குருக்கள் பட்டம் பெற்ற நவகாளிபுர பா.சிவநேச சிவாச்சாரியார் ஆகியோருக்கு அமைச்சர் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இதேபோன்று அமைச்சர் அவர்களுக்கும் குருமார்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

இதன்போது இந்துமத குருமார்களின் நல மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதில் ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா உள்ளிட்ட பல குருமார்கள் உடனிருந்தனர்.





0 கருத்துகள்:

BATTICALOA SONG