அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

சிறுமிகளை நிர்வாணப்படமெடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது


ரு சிறுமிகளை நிர்வாணப்படுத்தி அதை கையடக்க தொலைபேசியில் படமெடுத்து பின்னர் அச்சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொம்பே பகுதியில் வைத்தே இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஆபாச வீடியோ காட்சிகள் என்பன மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
9, 10 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG