அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 8 மார்ச், 2012

சம்பியனானது அவுஸ்திரேலிய அணி

வுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிபி கிண்ண முக்கோண கிரிக்கெட்தொடரில் அவுஸ்திரேலிய அணி சம்பியனாகியுள்ளது.
இன்று நடைபெற்ற 3ஆவது இறுதிப்போட்டியில் இலங்கை அணியை16 ஓட்டங்களால் வெற்றிகொண்டு அவுஸ்திரேலியா அணி சம்பியனானது. நாணைய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் அவுஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதற்கிணங்க 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 9.5 ஓவர்கள் பந்துவீசி ஓர் ஓட்டமற்ற ஓவர் உட்பட 28 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் கிளின்ட் மக்கே இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக இலங்கை அணியின் தில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG