அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 3 மார்ச், 2012

இலங்கையில் அமெரிக்கப் படைகள் இல்லை: இலங்கை இராணுவம்


லங்கையில் அமெரிக்க சிறப்புப் படைகள் இருப்பதாக வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. அமெரிக்காவினதோ வேறெந்த வெளிநாட்டினதோ துருப்புகள் தற்போது இலங்கையில் இல்லை என இராணுவப் பேச்சளார் நிஹால் ஹப்புஆரச்சி கூறினார்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத ஒழிப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அமெரிக்க சிறப்புப் படைகள் நிலைகொண்டிருப்பதாக அமெரிக்காவின் பெண்டகன் உயரதிகாரி அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள வருடாந்த 'நீர்க்காக தாக்குதல்' எனும் பெயரிலான கடல், ஆகாய, தரை பயிற்சிகளில் இலங்கையின் 2500 துருப்புகளுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக 8 பேர் கொண்ட அணிகளை அனுப்புமாறு நான்கு நாடுகளுக்கு இலங்கை இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG