அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 மார்ச், 2012

மற்றொரு பிரேரணையை தவிருங்கள்; மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்


க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய நடப்பதன் மூலம் இது போன்ற இன்னொரு தீர்மானம் கொண்டுவரப்படுவதை இலங்கை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்ட உலக மூத்த தலைவர்கள் குழு, இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
கொடூரமான யுத்தம் முடிந்த பின் நல்லிணக்கம் ஏற்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டுமெனக் கோரும் தீர்மானம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியதையிட்டு முன்னாள் உலகத் தலைவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளரும் அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியுமான மேரி றொபின்சன் பீ.பீ.சி சந்தேசயவுக்கு வழங்கியுள்ள பேட்டியில் கூறியுள்ளார். தன்மையான இந்த தீர்மானம் மேற்குலகால் கொண்டுவரப்பட்டதல்ல எனவும் இது ஒரு நாட்டை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, நைஜீரியா போன்ற பெரிய நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தமை எமக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது எனவும் மேரி றொபின்சன் கூறியுள்ளார். நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை செய்ய வேண்டியவை இன்னும் உள்ளன என பெரும்பான்மையான அரசாங்கங்கள் உணர்கின்றன என்பதை ஏற்றுக்கொள்வது இலங்கையின் நலனுக்கு உகந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமை நியமனங்களின்படி இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பாரதூரமானவை என கூறியுள்ள மேரி றொபின்சன், அடுத்த வருழடம் மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனிப்புக்குள் வராமலிருக்க வேண்டுமாயின் இலங்கை இந்த தீர்மானத்துக்கு அமைந்து ஒழுகுவது நல்லது எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருந்தமை உண்மையே. எனினும் பொதுமக்களைப் பாதுகாப்பது எந்தவொரு நாட்டினதும் கடமையாகும். இந்த தீர்மானத்தை ஆதரித்த நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளுடனான யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதம் வழங்கிய நாடுகளாகின்றன. ஆயுதப் போட்டியின் கடுமை பற்றி குறிப்பாக பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களை வழங்குதல், ஆயுதங்களுக்காக செலவளிக்கப்படும் பணம், ஆயுதக் கடத்தல் பற்றி அவர்கள் கவலை தெரிவித்தனர். இருப்பினும் யுத்தம் நீண்டுகொண்டே போனதும் பொதுமக்கள் பாதுகாக்கப்படாமல் விடப்பட்டமையும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டுமென முன்னாள் தலைவர்கள் கருதுவதாக மேரி றொபின்சன் மேலும் குறிப்பிட்டார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG