அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 12 மார்ச், 2012

அமெரிக்க சிப்பாயின் துப்பாக்கிச் சூட்டில் 16 ஆப்கான் பொதுமக்கள் பலி


ப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைவீரர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பொதுமக்கள் பலியானதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் இராணுவ முகாமிலிருந்து சென்ற இந்த இராணுவ வீரர், 3 வீடுகளில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள நேட்டோ அமைப்பு, இது 'மிகவும் கவலையான சம்பவம்' என கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஞ்வாய் மாவட்டத்தில் உள்ள படைத்தளத்திற்கு அருகில் ஒன்றுகூடிய மக்கள், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG