அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

நாட்டின் சார்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஐ.தே.க. ஆதரவு


நாட்டின் சார்பாக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுதியளித்துள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் முழுமையாக எதிர்ப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறினார்.
1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் எந்தவித சர்வதேச தலையீடுகளுக்கும் எதிராகவே இருக்குமெனவும் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG