அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடு சந்திப்பு!

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பன்னாட்டு அரச பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி சமாதானம் அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவராக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தலைவர் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தான் கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.









0 கருத்துகள்:

BATTICALOA SONG