அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இலங்கை தொடர்பான இணையத்தள மனுவில் குறைந்த எண்ணிக்கையிலான கையெழுத்துகள்


இ லங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை இடம்பெறுவதற்கு பிரிட்டிஷ் அரசு ஆதரவளிக்க வேண்டுமென கோரி கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இணையத்தள கோரிக்கை மனுவில் இன்றுவரை 3,472 பேர் மாத்திரமே கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்விண்ணப்பத்தில் 100,000 பேர் கையெழுத்திட்டிருந்தால் இவ்விடயம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள இந்த மனு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடைசிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து, ஐ.நா பொதுச் செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதைப் போல் சுயாதீனமான சர்வதேச விசாரணை இடம்பெறுவதற்கு பிரித்தானிய அரிசின் சுயாதீன ஆதரவு வேண்டுமென கோரப்பட்டுள்ளது. டாக்டர் அர்ஜுன சிவானந்தனால் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி இணையத்தள விண்ணப்பமானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி முடிவடைகிறது. இத்தகைய இணையத்தள மனுக்களில் 100,000 பேர் கையொப்பமிட்டால் பிரித்தானிய பொதுச் சபையில் இம் மனுக்கள் எடுத்துக்கொள்ளப்படுமென direct.gov.uk எனும் இந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மனுவிலுள்ள விடயம் குறித்து நீதிமன்ற வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால் அல்லது இதே விடயம் குறித்து நாடாளுமன்ற பொதுச்சபையில் அண்மையில் விவாதம் நடைபெற்றிருந்தால் அல்லது விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தால் இம்மனு தொடர்பாக விசேட விவாதம் நடத்தப்பட மாட்டாது. இவ்விண்ணப்ப நடவடிக்கை போர்க்குற்றம் தொடர்பிலான விவாதத்தை சாத்தியாமாக்கமால் போனாலும் இதேதலைப்பில் பிரிட்டிஷ் அரசில் விவாதம் முன்னெடுக்கப்படாலம். குறித்த இணையத்தளத்தில் கையொப்பமிடுபவர்களின் மொத்த எண்ணிக்கை காட்சிப்படுத்தப்படும் ஆனால் அதில் கையொப்பமிடுபவர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் வெளியிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG