அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2011

கட்டுக்கடங்காத ரசிகர்கள்... விழாவுக்கு வரவில்லை ரஜினி!


ள்ளுவர் கோட்டத்தில் நடந்த ரஜினி பிறந்த நாள் விழாவுக்கு எக்கச்சக்கமாக கூடினர் ரசிகர்கள். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் ரஜினி கடைசி வரை நிகழ்ச்சிக்கு வரவில்லை.
இன்று காலையிலிருந்தே வள்ளுவர் கோட்டம் பகுதி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கும் ரஜினி பேனர்கள். ஒரு முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கே உரிய அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து வாயில்களிலும் பலத்த காவல் போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் மற்றும் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் முதலில் கலை நிகழ்ச்சிகளும் பின்னர் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியும் நடந்தது. எஸ்பி முத்துராமன், கலைப்புலி தாணு, டிஜி தியாகராஜன் பங்கேற்று உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் எந்த நேரத்திலும் ரஜினி வருவார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். இரவு 8 மணிக்குள் நிகழ்ச்சி முடிக்கப்பட வேண்டும் என்று ரஜினியே தன் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் 9 மணியைத் தாண்டியும் நிகழ்ச்சி தொடர்ந்தது. கடைசி வரை ரஜினி வரவில்லை.

0 கருத்துகள்:

BATTICALOA SONG