அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்க எம்.பி.கள் குழு லண்டன் விஜயம்


ண்டனை மையப்படுத்தி செயற்படும் புலம்பெயர் இலங்கையர்களை சந்திப்பதற்காக 40 வயதிற்குட்பட்ட ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை லண்டன் பயணமாகவுள்ளனர்.
டிசெம்பர் 15ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருக்கவுள்ள இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனக ஹேரத், வசந்த சேனநாயக்க, ஹுனைஸ் பாரூக் மற்றும் எரிக் வீரவர்தன உள்ளிட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஹரின் பெர்ணான்டோ மற்றும் நிரோஷன் பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர். சர்வதேச அலர்ட் மற்றும் றோயல் கொமன்வெல்த் சமூத்தின் அழைப்பிற்கிணங்கவே லண்டன் செல்லும் இவர்கள், லண்டனிலுள்ள தமிழ் மற்றும் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கவுள்ளனர். இதன்போது, யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் அரசியல் நிலவரம், அபிவிருத்தி பணிகள், நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் புலம்பெயர் இலங்கையர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிக்க உள்ளனர். அத்துடன் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்சார் புலம்பெயர் இலங்கையர்கள், இளம் வர்தகர்கள், பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ள பல முக்கியஸ்தர்களை இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG