அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 டிசம்பர், 2011

காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு யாழில் ஆர்ப்பாட்டம்


னித உரிமைகள் தினமான இன்று சனிக்கிழமை காணாமல்ப்போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், காணாமல்ப்போன தமது உறவினர்களின் புகைப்படங்களையும் சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG