அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 5 டிசம்பர், 2011

அமெரிக்கா, நேட்டோ, ஐ.நாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் பாகிஸ்தான் மீளாய்வு: கிலானி

அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐ.நாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் பாகிஸ்தான் மீள்பரிசீலனை செய்கிறது என பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 26 ஆம் திகதி நேட்டோ படையினரின் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 24 பேர் பலியானமையே இதற்கு காரணம். லாகூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின்போது பிரதமர் கிலானி இதைத் தெரிவித்தார். 'இத்தாக்குதல் நடந்தவுடன், அதை நாம் மிகப் தீவிரமாக கருத்திற்கொண்டு இராணுவ, அரசியல் தலைமத்துவம் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் ஆராய்ந்தோம். நவம்பர் 26 தாக்குதல் காரணமாக முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பின் அரசாங்கத்தினால் அமெரிக்கா, நேட்டோ, சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் மற்றும் ஐ.நாவுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட அனைத்து தேசிய, சர்வதேச ஒப்பந்தங்களையும் மீளாய்வு செய்யவேண்டுமென பாகிஸ்தானின் அரசியல் இராணுவத் தலைமைத்துவங்களும் அமைச்சரவை பாதுகாப்பு குழுவும் கருதுவதாக பிரதமர் கிலானி கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG