அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 1 டிசம்பர், 2011

பிரிட்டனில் இலங்கை இளைஞர் கொலை


பிரிட்டனில் இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. 30 வயதான இவர் கடையொன்றில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரின் கழுத்துப் பகுதியில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் இவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லையெனக் கூறிய பொலிஸார், திறந்த மனதுடன் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினர். சுமார் 12 மாதங்களாக பிரிட்டனில் வசித்து வரும் இந்த இளைஞரின் இலங்கையிலுள்ள குடும்பத்தினரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை குடும்பத்தினருக்கு சொந்தமான கடையொன்றில் குறித்த இளைஞர் பணியாற்றி வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படும் சந்தே நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG