அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 டிசம்பர், 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியாகும்வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு


க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கைக்கான விஜயத்தினை ஒத்திவைத்ததாக அறிவித்துள்ளார்.
இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கைக்கான விஜயம் எப்போது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வாசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இம்மாதம் அது நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG