அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2011

குண்டு வெடிப்பில் அறுவர் படுகாயம்


வுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியமடு பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
புளியங்குளம் மணியமடு பிரதேசத்தில் நேற்று மாலை 5 மணியளவில் சின்னப்பரந்தன் ஓயாவிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டொன்றை பரீட்சித்து பார்க்க முற்பட்ட வேளையிலேயே அறுவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அப்பகுதியில் பாலம் ஒன்றின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்தோர் எனவும் அவர் தெரிவித்தார். வீட்டு வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ எங்காயிருந்தாலும் சந்தேகத்திற்கிடமான அல்லது மர்மப் பொருள்கள் காணப்பட்டால் அதனைப் பொதுமக்கள் பரீட்சித்துப் பார்க்க முற்படக்கூடாது. அவ்வாறான பொருட்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பொலிஸ் அவசர சேவைப் பிரிவான 119 என்ற இலக்க்த்துக்கோ தெரியப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை இவ் வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG