அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2011

ஐ.ரீ.என்.ஐ ராஜபக்ஷவின் குடும்ப தொலைக்காட்சியாக்க வேண்டாம்: நாமல்


சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரீ.என்) அலைவரிசையினை ராஜபக்ஷ குடும்பத்தினரின் தொலைக்காட்சியாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'ஐ.ரீ.என். தொலைக்காட்சி அலைவரிசையானது ராஜபக்ஷ குடும்பத்தின் தொலைக்காட்சி என எதிர்க்கட்சியினர் கூறுவது உண்மையாக உள்ளது. அந்த அலைவரிசையில், முதல் நாள் ஜனாதிபதியைக் காண்பிக்கின்றனர். அடுத்த நாள், சபாநாயகரையும் பாதுகாப்பு செயலாளரையும் காண்பிக்கின்றனர். அதேபோல, விளையாட்டு என்று வந்தால் என்னையும் என் சகோதரரையும் காண்பிக்கின்றார்கள். இந்த நாடாளுமன்றத்தில் 225 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் காண்பியுங்கள். மேற்படி தொலைக்காட்சி அலைவரிசையினை எங்கள் குடும்ப தொலைக்காட்சியாக வழிநடத்த வேண்டாம் என குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருக்கு தெரிவியுங்கள்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG