அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 நவம்பர், 2011

தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விருப்பமில்லை - ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!


மிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுப் பிரச்சினையை தொடர்ந்து இழுத்தடிப்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
<அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கன்சர்வேடிவ் கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்றிவோன் ஒர்டன் அவர்கள் அமைச்சர் அவர்களது கொழும்பிலுள்ள வாசஸ்தலத்தில் நேற்றுமுன்தினம் (23) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலின் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், இனப்பிரச்சினை மற்றும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தடையாக இருந்து வருகின்றனர் என்றும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண அவர்கள் மனந்திருந்தி முன்வர வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியதுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எமது மக்களின் பிரதிநிதிகளாகவே இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்றும் எனவே பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வாய்ப்புக்களும் ஆற்றலும் எமக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்நாட்டில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 31 அரசியல் கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுக் குழுவொன்றை அமைப்பது தொடர்பிலான யோசனை பாராளுமன்ற சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அரசதரப்பைச் சேர்ந்த 17 கட்சிகளும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 14 கட்சிகளும் அங்கம் வகிப்பதாகவும் இக்குழவின் ஆய்வறிக்கையை எதிர்வரும் ஆறுமாதகாலத்திற்குள் பெற்றுக் கொண்டு அதனை ஆராய்ந்து அதன் மூலம் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இதன் போது அமைச்சர் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அத்துடன் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு ஓர் ஆரம்பமாக 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்தி பின்னர் அதற்கு மேலதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் உரிய இலக்கை அடைய முடியும் என்றும் அதுவே சகல தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக அமையுமென்றும் நம்பிக்கைத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் தான் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்லாமல் இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் சார்பான அமைச்சராகவே செயற்பட்டு வருகின்றேன் என்றும் தெரிவித்தார். நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் சிலை புனரமைப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சில தமிழ் ஊடகங்கள் சங்கிலியன் சிலையை அகற்றி விட்டு புத்தரின் சிலையை அங்கு வைக்கப் போவதாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்பி வந்தனர். ஆனால் அதேயிடத்தில் சங்கிலியன் சிலை தற்போது கம்பீரமான முறையில் புனரமைக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினது தலைமையிலான அரசின் மூலமே தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக் கொள்ள முடியுமெனத் தான் நம்புவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்றிவோன் ஓர்டன் அவர்களுக்கு உறுதிபடத் தெரிவித்தார். அமைச்சர் அவர்களது கருத்துக்களை உன்னிப்பாக செவிமடுத்த மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயங்கள் தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் அவர்களது ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் உடனிருந்தார்.



script type="text/javascript">

0 கருத்துகள்:

BATTICALOA SONG