அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2011

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு; தடுக்கும் வகையில் பேரினவாதிகள் : சித்தார்த்தன்


தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதைத் தடுப்பதற்காகவே பேரினவாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயத்திற்கு இனவாத சாயம் பூசுகின்றனர். இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளமை வரலாறாகும் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "வெளிநாடு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு இடத்திலும் தனித் தமிழீழம் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டதில்லை. தமிழ் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வது இது முதற் தடவையல்ல. கடந்த காலங்களில் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காதபோது பல தமிழ்த் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இது தொடர்பில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். அது மட்டுமல்ல. இன்றைய ஜனாதிபதி கடந்தகால ஆட்சியாளர்கள் மனித உரிமைகளை மீறுவதாக ஐ.நா வில் முறையிட்டுள்ளார். தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல பல்வேறு கால கட்டங்களில் சிங்களத் தலைவர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காததன் காரணமாகவே தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். தீர்வுகள் கிடைக்குமானால் வெளிநாடு சென்று முறையிடும் தேவை ஏற்படாது. ஆனால் பேரினவாதிகள் இனவாதத்தைத் தூண்டுகின்றனர். தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதனைத் தடுக்கின்றனர். இதனை இவர்கள் கைவிட வேண்டும். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு இவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG