அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 நவம்பர், 2011

யாழ் அரச காணிகள் தனியாருக்கு விற்கப்படமாட்டாது: அரச அதிபர்


யாழ். குடாநாட்டில் அரச காணிகள் எவையும் தனியாருக்கு விற்கப்படமாட்டாது என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
யாழில் முதலீடுகளைச் செய்வதற்காக பல்தேசிய கம்பனிகள் யாழ்.மாவட்டத்தில் முனைப்பைக் கொண்டுள்ளதாகவும் அரச காணிகள் இருந்தால் தரும்படி தனக்கு இம்மாதத்தில் மாத்திரம் 55 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் தனியாருக்கு காணிகளை வழங்குவது தொடர்பாக காணியமைச்சிடம் இருந்து உத்தியோகபூர்வமான எந்தவித அறிவித்தலும் வரவில்லை எனவும் யாழில் தனியார் கம்பனிகளுக்கு காணிவழங்க முடியாது எனவும் கூறினார். காணிகளைக் கொள்வனவு செய்வதற்கு தென்பகுதி வர்த்தகர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG