ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிறேரோவுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தான் வாக்களிக்கப் போவதாக ஐ.தே.க. எம்.பி. மொஹான் லால் கிறேரோ இன்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சி எம்.பிகள் சிலர் கிறேரோவை ஜனாதிபதியிடம் அழைத்துச்சென்றனர். மொஹான் லால் கிறேரோ, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தவின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில் வரவுசெலவுத்திட்டத்தின் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது, மொஹான் லால் கிறேரோ பிரதி கல்வி அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக