அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 27 அக்டோபர், 2011

இருள் அகன்று ஒளி பிறந்த தீபாவளித் திருநாளை நம்பிக்கையோடு வரவேற்று கொண்டாடுவோம்

இருள் அகன்று ஒளி பிறந்த தீபாவளித் திருநாளை நம்பிக்கையோடு வரவேற்று கனிந்துள்ள சூழலும் இனி வரும் காலமும் இன்னமும் ஒளி வீசும் என்ற எதிர்கால இலட்சியங்களோடு தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் துயரங்களும் அவலங்களும் சூழந்து தமிழ் மக்களின் வாழ்வின் மீது வலிகளையும் வதைகளையும் தந்து கொண்டிருந்த கடந்து போன வரலாறுகள் யாவும் கசப்பான அனுபவங்களே. இனி இங்கு துயரம் சூழ்ந்த வாழ்க்கை இல்லை. இனி வரும் காலம் என்பது நாம் இழந்தவற்றில் இருந்து நிமிர்ந்தெழும் காலமே என்றும் நாம் செல்ல வேண்டிய திசை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழல் இது. தமிழ் மக்கள் இன்னமும் அடைய வேண்டிய சகல வாழ்வியல் மகிழ்ச்சிகளையும் விரைவாக பெற்று சகல உரிமைகளையும் மகிழ்ந்து அனுபவிக்கும் சூழலே இன்று கனிந்திருக்கிறது என்ற நம்பிக்கைகள் மேலும் துலங்க வேண்டும். கொடுமைகள் ஒழிந்து குதூகலம் பிறந்த தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சியானது தமிழ் மக்களின் வாழ்விடங்கள் தோறும் அர்த்தமுள்ள மகிழ்சியாக இன்னமும் மாற வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தாயகத்திலுள்ள தமிழ் மக்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு கடந்த கால அனுபவங்களும் சமகால முன்னெடுப்புகளும் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG