அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான வழக்கை அனுமதிக்க ஆஸி சட்டமா அதிபர் மறுப்பு


லங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான போர்க்குற்றச்சாட்டு வழக்கை அனுமதிப்பதற்கு அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் மறுத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு பொதுமக்கள் மீது வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழரான ஓய்வு பெற்ற பொறியிலாளர் ஜெகன் வரன் மெல்போர்ன் நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தார். இத்தகைய வழக்கு முன்னெடுக்கப்படுவதற்கு அவுஸ்திரேலிய சட்டமா அதிபரின் சம்மதம் அவசியமாகும். பொதுநலவாய உச்சிமாநாட்டுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்வழக்கு முன்னெடுக்கப்பட அனுமதித்தால் ராஜதந்திர தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமையும் என அவுஸ்திரேலிய சட்டமா அதிபரின் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG