அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

பொலிஸ் கான்ஸ்டபிள் வெட்டிக்கொலை

பாணந்துறை மொரட்டு மோதரை பகுதியில் 28 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மன்னா கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை இரு குழுக்களுக்கிடையில் நடந்த மோதலை நிறுத்துவதற்கு அவர் தலையிட்டபோதே இக்கொலை இடம்பெற்றுள்ளது.
மொரட்டு-மோதர பகுதியில் இரு குழுக்களுக்கடையில் வாள்கள், பொல்லுகள் சகிதம் மோதல் இடம்பெறுவதாக பிரதேச வாசிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மொரட்டுமோதர பகுதிக்கான குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் குழுவொன்றுடன் சந்தரவிமல சமரவிக்கிரம எனும் மேற்படி கான்ஸ்டபிள் அப்பகுதிக்கு சென்றிருந்தார். அதிகாலை ஒரு மணியளவில் பொலிஸ் குழுவினர் மோதல் இடம்பெற்ற இடத்தை அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வேளை ஒரு நபர் மன்னா கத்தியால் மேற்படி கான்ஸ்டபிளை தாக்கியுள்ளார். தலையில் காயமடைந்த அக்கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழந்தார். அதன்பின் இக்கொலையுடன் தொடர்புயை நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் அப்பகுதியில் கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்போது ஒரு நபர் கைது செய்யப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG