அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 15 அக்டோபர், 2011

புத்தூரில் மர்ம மரணம் தொடர்பில் மூவர் கைது


புத்தூரில் சடலமாக மீட்க்கப்பட்ட சிங்கள இளம் குடும்பஸ்தரின் மரணம் சம்பந்தமாக மத குரு உட்பட மூவர் அச்சுவேலிப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் நேற்று வெள்ளிக் கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த ஹெட்டி ஆராய்ச்சி சுரேஸ் 34 வயது இரண்டு பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டில் இருந்து கிளிநொச்சிக்கு வேலைக்குச் செல்வதாக புறப்பட்டுச் சென்றவர் விடுதிரும்பவில்லையென சுன்னாகம் பொலிசில் மனைவியனால் முறையிடப்பட்டு இருந்தது. இந் நிலையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பின்னர் இரண்டாம் நாள் குறிப்பிட்ட நபர் புத்தூர் வீதியில் உள்ள கிடங்குப் பகுதியில் காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ___ E-mail to a friend

0 கருத்துகள்:

BATTICALOA SONG