அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

முருகன், சாந்தன், பேரறிவாளனின் மனு விசாரணை சனிக்கிழமைக்கு ஒத்திவைப்பு


ரா ஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் (மேல் நீதிமன்றம்) நவம்பர் 29 ஆம் திகதி சனிக்கிழமைக்கு இன்று ஒத்திவைத்தது.
தாம் 20 வருடங்களாக சிறையில்இருப்பதாகவும் தமக்கு கருணை காட்டுமாறு கோரி இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு வருடங்களின் பின்னரே ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறி, தமக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய வேண்டுமென மேற்படி மூவரும் சென்னை உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதையடுத்து இவர்களை தூக்கிலிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது. இந்திய உச்சநீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சி நாகப்பன், எம்.சத்யநாராயணன் ஆகியோர் மேற்படி மனுவை சனிக்கிழமை வரை ஒத்திவைப்பதாக. ஆறித்தனர். மத்திய அரசாங்கத்தின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எம். ரவீந்திரன் ஆஜரானார். மனுதார்கள் சார்பில் மதிமக பொதுச் செயலாளர் வைகோ, வழக்குரைஞர்கள் ஆர். வைகை மற்றும் என். சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகினர். இவ்வழக்கில் இந்திய மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த மனுவில் மேற்படி மூவர் மீதான மரண தண்டனை இரத்துச் செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கருணை மனுவை பரிசீலிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதன் அடிப்படையில் மரண தண்டனையை இரத்துச் செய்யமுடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG