அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 12 அக்டோபர், 2011

வலை உற்பத்தி நிலையங்கள் ஒப்படைப்பு!


டற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த வீரவில மற்றும் லுணுவில மீன்பிடி வலை உற்பத்தி நிலையங்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொழும்பிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அவர்களினதும் முன்னிலையில் இன்றைய தினம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மேற்படி மீன்பிடி வலை உற்பத்தி நிலையங்கள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வடகடல் நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளன.








0 கருத்துகள்:

BATTICALOA SONG