அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ஆஸி. கிறீன்ஸ் கட்சியின் கோரிக்கைக்கு இலங்கை உயர் ஸ்தானிகர் கடும் எதிர்ப்பு

லங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் கிறீன்ஸ் கட்சி விடுத்துள்ள கோரிக்கையை அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் றியர் அட்மிரல் திசேர சமரசிங்க கடுமையாக சாடியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை ஆதாரமற்ற பிரச்சாரங்கள் என அவர் விமர்சித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்வரை பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையின் அங்கத்துவத்தை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என அவுஸ்திரேலிய கிறீன் கட்சியின் செனட்டர் லீ றியானன் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார். மனித உரிமை செயற்பாட்டாளர்களுடன் இன்று வட்டமேசை மாநாடொன்றை நடத்திய லீ றியானன், இலங்கை தொடர்பாக விசாரிப்பதற்காக சர்வதேச விசாரணை மன்றமொன்றை ஏற்படுத்துவதற்கு பிரதமர் ஜூலியா கில்லார்ட்டின் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென கோரியுள்ளார். அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சிமாநாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்வற்கு தாம் இடையூறு விளைவிக்கக்கூடும் என்பதையும் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றியவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு பிரித்தானிய, கனேடிய பிரதமர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இவ்விடயத்தில் மௌனமாக இருப்பதாக மேற்படி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். 'மனித உரிமைக்காக முன்னிற்பதற்கான பந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பக்கம் உள்ளது. வேலிமீது அமர்ந்திருப்பதற்கான தருணம் இதுவல்ல' என றியானன் கூறியுள்ளார். எனினும் மேற்படி குற்றச்சாட்டுகளானவை ஆதாரமற்ற பிரசாரங்களாகும் என இலங்கை உயர் ஸ்தானிகர் றியல் அட்மிரல் திசேர சமரசிங்க கூறியுள்ளார். 'பொதுமக்களை காப்பாற்றுவதற்காக பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. இந்த (பிரசாரம்) முழுவதும் தோற்கடிக்கப்பட்ட பயங்கரவாதிகள் சார்பு அமைப்புகளினால் மேற்கொள்ளப்படுபவையாகும்' என அவர் கூறியுள்ளார். இதேவேளை அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் சாம் பெரி கருத்துத் தெரிவிக்கையில், போர்க் குற்றச்சாட்டு விசாரணையானது ஏனைய ஆட்சியாளர்கள் தனது சொந்த மக்களை கொல்வதிலிருந்து தடுக்கும் எனக் கூறினார். அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூட், இலங்கையின் இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட பொதுமக்கள் இழப்புகள் குறித்து முன்னர் கவலை தெரிவித்திருந்தார். மனித உரிமை குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என கடந்த ஜுன் மாதம் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG