அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

துவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
பத்துக்கு பத்து, குரு என் ஆளு, குசேலன், கோ உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. சமீபத்தில் கனிமொழி என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சோனாவும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் நண்பர்கள். வெங்கட்பிரபு டைரக்ஷனில், சோனா ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசில் சோனா பாலியல் புகார் கொடுத்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண். உன்னை சரண் அடைந்தேன், சென்னை-28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார். உன்னை சரண் அடைந்தேன் படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக நடித்தும் இருக்கிறார். மங்காத்தா பார்ட்டியில்... இதுகுறித்து சோனா நிருபர்களிடம் கூறுகையில், "மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு, 'பார்ட்டி' நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட 'மங்காத்தா' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரணும் அந்த 'பார்ட்டி'க்கு வந்திருந்தார். வெங்கட்பிரபு என் நண்பர் என்பதால், என்னையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று நானும் 'பார்ட்டி'யில் கலந்துகொண்டேன். அங்கு மது விருந்து நடந்தது. திடீரென்று எஸ்.பி.சரண் என் மீது பாய்ந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் வெட்கத்தாலும், அதிர்ச்சியாலும் கூனிக் குறுகி போய்விட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் ஒரு கவர்ச்சி நடிகைதான். பிழைப்புக்காக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். ஆனால், நான் விலை மாது அல்ல. ஏற்கனவே ஒருமுறை, எஸ்.பி.சரண் என்னிடம் தவறாக பேசினார். அதில் இருந்து நான் அவருடன் பேசுவதில்லை. இதுபற்றி நான் பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன். போலீஸ் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, எடுக்கட்டும். அதோடு எஸ்.பி.சரண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார்’’ என்று கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக சோனா நேற்று இரவு பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுவை சந்தித்து புகார் கொடுத்தார். எஸ்பிபி சரண் பதில் நடிகை சோனாவின் பாலியல் புகார் குறித்து எஸ்.பி.சரண் கூறுகையில், "வைபவ் வீட்டில் மது விருந்து நடந்தது உண்மை. ஆனால், சோனா சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. நான், சோனாவிடம் 'பிஸினஸ்' பற்றிதான் பேசினேன். அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தார். பிறகு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அதனால் வெங்கட்பிரபுவை வைத்து நான் படம் தயாரிக்க முடிவு செய்து, அது தொடர்பாகத்தான் சோனாவிடம் பேசினேன்’’ என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG