அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 19 செப்டம்பர், 2011

நாமல் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலராக 'நடித்தவர்' கைது

நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் எனக் கூறிக்கொண்டு பலரை ஏமாற்றிய நபர் ஒருவரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ.ம.சு. கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றின்போது இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கூடாக தொழில்வாய்ப்புபெற்றுத் தருவதாக கூறி இளைஞர் யுவதிகளிடம் இந்நபர் பணம்பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் போலியான அடையாள அட்டை, 9 செல்லிட தொலைபேசி சிம் அட்டைகள், கடிதத் தலைப்புகள், விண்ணப்ப படிவங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 27 வயதான இச்சந்தேக நபர் பதுளையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் பல்வேறு பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றிவிட்டு, அக்கூட்டங்களுக்கு நாமல் ராஜபக்ஷ வருவதற்குமுன் வெளியேறியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார். எனினும் மடபலாத்தவில் நடைபெற்ற கூட்டமொன்றில் நாமல் ராஜபக்ஷ மேடையில் இருக்கும்போது உரையாற்றிய இந்நபர் பொலிஸாரால் கைதானார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG