அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 14 செப்டம்பர், 2011

தருஷ்மன் குழுவின் அறிக்கையை ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க முடியாது: அமைச்சர் சமரசிங்க

க்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டும் நியமிக்கப்பட்ட தருஷ்மன் குழுவின் அறிக்கையை ஐ.நா.வின் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்க முடியாது. அவ்வாறு சமர்ப்பிப்பது மனித உரிமைப் பேரவையின் நடைமுறைகளை மீறும் செயலாகும். எனினும், தருஷ்மன் அறிக்கை மனித உரிமை பேரவைக்கு வந்தால் அதற்கு முகம் கொடுக்கவும் நகர்வுகளை மேற்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை விடயங்களுக்குப் பொறுப்பானவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு இலங்கையின் சார்பில் அமைச்சர் உரையாற்றினார். மேலும் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை எமக்கு ஆதரவளிக்கின்றன. அந்நாடுகளுக்கு எமது நிலைப்பாட்டையும் நாட்டின் முன்னேற்றத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே எமக்கு அந்நாடுகளின் ஆதரவு உள்ளது. இந்நிலையில் குறித்த நிலைமைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG