அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 26 செப்டம்பர், 2011

இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவிப்பு

ந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக இந்திய தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை சந்தித்தபோது அமைச்சர் சிதம்பரம் தான் ராஜினாமா செய்ய விரும்புவதை தெரிவித்ததாக சி.என்.என்.- ஐபிஎன் தொலைக்காட்சி தெரிவித்தது. 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற 2ஜி வானொலி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது இந்திய அரசுக்கு பல லட்சம் கோடி ரூபா இழப்பை ஏற்படுத்திய மோசடியை அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் தடுக்கத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அரசாங்கத்திற்கு சங்கடம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தான் ராஜினாமா செய்ய விரும்புவதாக அமைச்சர் சிதம்பரம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG