அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 26 செப்டம்பர், 2011

தாயையும் மகனையும் வாளால் வெட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளை

யாழ். சித்தங்கேணி கீரிமலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த கொள்ளையர் குழு, வீட்டிலிருந்த தாயையும் மகனையும் வாளால் வெட்டிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தங்க ஆபரணங்களையும் பெறுமதியான இலத்திரனியல் சாதனங்களையும் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகியுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் கூறினர். கொள்ளையரின் வாள்வெட்டிற்கு இலக்காகிய சுந்தரலிங்கம் மங்கையக்கரசி, அவரின் மகன் சுந்தரலிங்கம் ராஜன் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வட்டக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG