அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

யாழில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

புயாழ். ன்னாலைக்கட்டுவன் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஈவினைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் ஜேந்திரா (வயது 38) என்ற குடும்பஸ்தரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதியில் மேற்படி குடும்பஸ்தர் வெட்டுக்காயங்களுடன் மரணமடைந்து காணப்பட்ட நிலையில் சடலமாக அவரின் உறவினர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இவரது சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG