அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 21 செப்டம்பர், 2011

சொக்லேட் கொடுத்து 10 வயது சிறுமி மீது துஷ்பிரயோகம்; 50வயது சந்தேகநபர் கைது

னிப்புப் பண்டங்களை வாங்கிக்கொடுத்து 10 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று மாலை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, களுவாஞ்சிக்குடி, மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியொருவர் அவரது வீட்டு முன்றலில் நின்றிருந்த போது அவ்வழியாக வந்துள்ள முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் சொக்லேட் போன்ற இனிப்புப் பண்டங்களைக் கொடுத்து சிறுமியை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். இந்நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியை மகிழூர் கிராமத்தின் ஒரு மறைவிடத்தில் வைத்து அச்சந்தேகநபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இதன்போது சிறுமியின் அழுகுரல் கேட்டு அவ்விடத்தை பொதுமக்கள் சுற்றிவளைத்த போது சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள சந்தேநபர், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG