அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 17 ஆகஸ்ட், 2011

அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்: தயாசிறி

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் செயற்பாட்டில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாம் பெற்றுக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் இறுதிக் கட்டத்தில் இந்தியா எமக்கு வழங்கிய உதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்திலிருந்து இந்திய மத்திய அரசுக்கு பல்வேறு அழுத்தங்கள் சென்ற நிலையிலும் இந்தியா எமக்கு ஆதரவாக இருந்தமை விசேட அம்சமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இலங்கையில் இதயசுத்தியுடனான அரசியல் தீர்வை எதிர்பார்ப்பதாகவும் அரசியல் தீர்வு செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தயாசிறி ஜயசேகர எம்.பி. இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்: பல்வேறு வழிகளில் இலங்கை தொடர்பான இந்தியாவின் நகர்வுகளுக்கு நாம் அந்நாட்டுக்கு நன்றி கூறியாகவேண்டும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழகத்திலிருந்து இந்திய மத்திய அரசுக்கு பாரிய அழுத்தங்கள் சென்றன. எனினும் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு யுத்தத்தின்போது பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கிவந்தது. மேலும் இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு தமிழக அரசாங்கம் கூறும்போதும் இந்திய மத்திய அரசாங்கம் எமது நாட்டுக்கு உதவிகளை வழங்கிவருவதுடன் பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. எனவே இவை தொடர்பில் நாம் எப்போதும் இந்தியாவுக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். இந்நிலையில் தேசிய பிரச்சினை விடயத்தில் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு இலங்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது. தீர்வுத்திட்டத்தை விரைவில் முன்வைக்குமாறு நாங்களும் கோரிக்கை விடுக்கின்றோம். அந்த வகையில் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் செயற்பாட்டில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாம் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும். அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதனை நாம் புறக்கணிக்க முடியாது. எப்படியிருப்பினும் தற்போதைய நிலைமையில் அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கவேண்டிய தேவையுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி அரசாங்கம் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG