அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தற்போது ஏற்பட்டுள்ள அமைதியையும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் குழப்பவேண்டாம் - அமைச்சர் பசில்

ற்போது ஏற்பட்டுள்ள அமைதியையும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் குழப்பவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்
வவுனியா விவசாய பண்ணையில் நடைபெற்றுவரும் தேசிய விவசாயிகள் வாரத்தின் இறுதிநாள் வைபவத்தில் கலந்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வடபகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் போது ஒரு போத்தல் தண்ணீர் கூட வழங்கமுடியாத இவர்கள் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து இப்போது பேசுவது வேடிக்கையாகவுள்ளது.
எங்களுடைய அரசாங்கம் எந்தவொரு இனத்திற்கும் வேற்றுமை காட்டவில்லை. சகலருடைய தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றது. விவசாயத்துறையில் நாங்கள் பலவித முன்னேற்றங்களை அடையவேண்டும். சுதந்திரத்திற்கு முன்னர் நாம் விவசாய துறையில் முன்னேற்றம் அடைந்திருந்தோம்.
வடபகுதியின் பல இடங்களில் விவசாய முன்னேற்றத்திற்கு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையம் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைகள் விரைவில் இயங்கவைக்கவுள்ளோம்.
மக்கள் சுதந்திரமாக நடமாடும் சூழல் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG