பதுளை தெமோதர பெருந்தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் பலியாகியதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
தேயிலையை உலரச் செய்வதற்காக தோட்ட நிர்வாகம் கடந்த ஒரு வார காலத்துக்கு முன்னர் நாளொன்றுக்கு ஐயாயிரம் தேயிலை கொழுந்தை மிகவிரைவாக உலரச் செய்ய கூடிய ‘பொய்லர்’ கொதிகலன் ஒன்றை நிர்மாணித்திருந்தது.
இந்த கொதிகலன் வெடிப்புண்டதிலேயே மேற்படி விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே மூவர் பலியாகினர். பல தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
மேலும் இந்த வெடிப்பினால் தேயிலை தொழிற்சாலையின் மூன்றாம் தட்டு கூரை சேதமடைந்திருப்பதாகவும், சம்பவ இடம் பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றதை போன்று காட்சியளிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக