அ மைச்சருடன் ,இரகசியத் தொடர்பு வைத்ததாக கைது செய்யப்பட்ட சுவாசிலாந்து நாட்டின் ராணி அந்நாட்டு மன்னரும் ராணியின் கணவருமான மஸ்வதி தன்னை சிறை வைத்து சித்திரவதை செய்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுவாசிலாந்து நாட்டின் மன்னர் மஸ்வதியின் 12 ஆவது மனைவியான நொத்தாண்டோ டியுப் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மொடல் அழகியாவார். இவர் அந்நாட்டு முன்னாள் நிதி அமைச்சருடன் இருக்கும் வேளையில் கைது செய்யப்பட்டார். தற்போது தனது நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மன்னர் மூன்றாம் மஸ்வதி அரண்மனையில் வைத்து தன்னை பலவகையில் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தினார். அரண்மனையில் ஒரு சிறைக்கைதியாக இருந்தது போன்று நான் அடைக்கப்பட்டேன். என்னை கடுமையாக தாக்கினார். மேலும் என்னை எங்கேயும் செல்லவிடாமல், எனது குடும்பத்தினரையும் சந்திக்கவிடாமல் 24 மணி நேரமும் அரண்மனைக் காவலர்களின் கண்காணிப்பில் வைத்தார். இதனால் நானும் எனது மூன்று குழந்தைகளும் அரண்மனை வீட்டுக்காவலில் கடும் அவதிக்குள்ளாகினோம் என்று கூறினார். ஆபிரிக்க நாடான சுவாசிலாந்தின் மன்னராக இருப்பவர் மூன்றாம் மஸ்வதி (43). இவர் பல பெண்களை மணந்தவர் , இவருக்கு 12 மனைவிகளும், 23 குழந்தைகளும் உள்ளனர். இவர் நொத்தாண்டோவை அவரது 16 வயதில் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக