அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நல்லூர் கொடியேற்ற உற்சவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்!

ரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிறப்புப் பூசை வழிபாடுகளில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நல்லூர் கந்தசாமி கோயிலின் வருடாந்த உற்சவம் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை முடிந்த 6ம் நாள் கொடியேற்றத்துடன் தொடர்ந்து 25 நாட்கள் தினங்கள் நடைபெறும்.

வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்ற கொடியேற்ற உற்சவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி அவர்களும் சிறப்புப் பூசை வழி;பாடுகளில் கலந்து கொண்டதுடன் நாவலர் மண்டபத்தையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 13ம் திகதி மஞ்சத் திருவிழாவும் 23ம் திகதி கைலாச வாகனமும் 26ம் திகதி சப்பறத் திருவிழாவும் 27ம் திகதி தேர்த் திருவிழாவும் ஆவணி அமாவாசையான 28ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற்று எதிர்வரும் 30ம் திகதியுடன் உற்சவம் நிறைவு பெறும்.

இந்நிலையில் உற்சவ காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனைக் கருத்திற் கொண்டு கோயில் வளாகத்தில் யாழ்.மாநகர சபையினால் மணல் பரப்பப்பட்டுள்ள போதிலும் வளாகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் அவர்கள், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவிடம் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் யாழ்.மாநகர சபையின் நீர் விநியோகப் பகுதியையும் ஆளுநர் சந்திரசிறி மாநகர முதல்வர் சகிதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

















0 கருத்துகள்:

BATTICALOA SONG