அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கோப்பாயில் தூக்கில் தொங்கிய சடலங்கள் கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கிலிடப்பட்டுள்ளன: வைத்திய அதிகாரி

யாழ். கோப்பாயில் சடலமாக மீட்கப்பட்ட ஆண், பெண் இருவரும் கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர் என்றும் இவர்களின் உடல்களில் உட்காயங்கள் பல காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் சிவரூபன் தெவித்துள்ளார்.
கோப்பாயில் இராச வீதியிலுள்ள காணி ஒன்றில் பனைமரத்தில் தூக்கில் தொங்கிய அருளன் தனபாலசிங்கம் (வயது 43) மற்றும் இந்துஷா (வயது 24) ஆகிய இருவரின் மரணம் தொடர்பாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தமையை அடுத்து பொலிஸாரின் விசாரணைக்காக சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னரே சடலங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளன என்று சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இன்று இந்த இருசடலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை யாழ். நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG