அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

போலி குற்றச்சாட்டுக்களை நம்பாது இலங்கையின் குரலை செவிமடுத்து நீதி வழங்கவேண்டும்: பீரிஸ்

போலியான குற்றச்சாட்டுக்களை நம்பாது இலங்கையின் குரலை செவிமடுத்து நீதி வழங்க சர்வதேசம் முன்வர வேண்டும். பொருளாதார அபிவிருத்தி இலக்கை அடைய முயற்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு உதவிக்கரங்களே தேவையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்களை முன் வைப்பவர்கள் யுத்தகாலப் பகுதியிலோ அதற்கு முன்னரோ உள்நாட்டில் வாழ்ந்தவர்கள் அல்லர். தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலில் செயற்பட்டு இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே மனித உரிமைகள் மற்றும் போர் குற்றச்சாட்டுக்களை வெளியிடுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் ""மனிதாபிமான நடவடிக்கைகள் உண்மை பகுப்பாய்வு'' என்ற தொனிப்பொருளிலான அறிக்கை வெளியீடு நேற்று திங்கட்கிழமை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து இன்று நாட்டில் சமாதானம் பிறந்துள்ளது. தற்போது நிலையான ஜனநாயகம் விஸ்தரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பிரதேசங்களிலும் சகல இன மக்களும் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை முன்னெடுத்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக வடக்கில் அடிப்படை கட்டுமானங்களை மேம்படுத்தி பொது மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசு பல வழிகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு நட்புக் கரங்களை நீட்ட வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாது அடிப்படை தன்மையற்ற வகையில் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சர்வதேசம் இலங்கையை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றது. இந்நிலை மாற வேண்டும். இங்கையில் நியாயமான குரலை செவிமடுத்து நீதி வழங்க வேண்டும். சர்வதேசத்தில் இருந்துக் கொண்டு இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைப்பவர்களுக்கு உண்மை நிலவரம் தெரியாது. எனவே சகல இனங்களுக்கு ஏற்ற பொருளாதார அரசியல் முன்னெடுப்புகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான முன்னெடுப்புகளுக்கு சர்வதேசம் உதவிக் கரம் நீட்ட வேண்டும் எனக் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG