அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 28 ஜூலை, 2011

அம்மா டயானாவின் தோடுகளை மனைவி கேட்டுக்கு பரிசளித்த வில்லியம்

றைந்த தனது தாயார் டயானா அணிந்திருந்த வைரத் தோடுகளை தனது காதல் மனைவி கேட் மிடில்டனுக்கு பரிசாக அளித்துள்ளார் இளவரசர் வில்லியம்.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் கணவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கேட், இந்த அழகி. தோடுகளை காதில் அணிந்தபடி வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது.
இருப்பினும் மாமியார் டயானாவின் தோடுகளை அப்படியே அணியாமல் சற்று ரீமாடல் செய்து அதை அணிந்திருந்தார் கேட்.
தனது தாயார் அணிந்திருந்த சில நகைகளை தனது மனைவிக்கு அளிக்க வில்லியம் விரும்பியதாகவும், இதனால்தான் தோடுகளை கேட்டுக்குக் கொடுத்து போட்டு அழகு பார்த்து வருவதாகவும் இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதியுள்ளன.
கேட் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதி வரும் இங்கிலாந்து பத்திரிகைகள், இருந்தாலும் டயானாவின் அழகு, புகழை கேட் நெருங்க ரொம்ப காலமாகும் என்று குறிப்பிடவும் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG