அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 15 ஜூலை, 2011

பாடசாலை மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

ருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இளைஞன் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


மேசன் தொழில் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற தங்கராசா தயாகரன் என்ற 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளதாவது, உருத்திரபுரம் பகுதியில் உள்ள 15 வயதேயான மாணவி ஒருவர் பாடசாலைக்குச் சென்றிருந்த போது வகுப்பில் மயக்கமடைந்துள்ளார். வகுப்பாசிரியரும் ஏனைய மாணவர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் இவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வைத்திய உதவிக்காகக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு அந்த மாணவியைப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் அந்த மாணவி எட்டு மாதக் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பொலிசார், அந்த மாணவியுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் அடிக்கடி உடலுறவு கொண்டு வந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து சந்தேக நபராகிய இளைஞனைக் கைது செய்து விசாரணை செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி அவரை சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி வைத்திய அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி மீதான வைத்திய பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG