அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2011

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையர் விடுதலை

சோமாலிய கடற்கொள்ளைக்காரரால் ஜுலை மாதம் 16ஆம் திகதி யேமன் கடற்கரையிலிருந்து இலங்கையர் உட்பட 17 ஊழியர்களுடன் கடத்தப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட் கொடி தாங்கிய எண்ணெய்த்தாங்கி கப்பலான எம்.வி. ஜுப்பா XX என்ற கப்பல் புதன்கிழமை விடுவிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

கடத்தப்பட்ட கப்பலின் ஊழியர் 17 பேரின் பாதுகாப்பு உள்ளதை தேசிய போக்குவரத்து அதிகாரசபை உறுதியளித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நன்மதிப்பு, அதற்கு பல்வேறு நாடுகளுடன் உள்ள நல்லுறவு என்பவை காரணமாக கப்பம் ஏதும் செலுத்தப்படாமல் இந்;தக் கப்பல் விடுவிக்கப்பட்டது. இந்த கப்பலை விடுவிப்பதற்கு பொது வேலைகள் அமைச்சரும் தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் தலைவருமான சைக் ஹம்டன், பின் முபாரக் அல் நஹ்யான் எடுத்த முயற்சிகள் பாராட்டப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG