அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 22 ஜூலை, 2011

இலங்கை அரசுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றின் முன் ஆர்ப்பாட்டம் : வைகோ

லங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி ஓகஸ்ட் 12 ஆம் திகதி புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையுடனான வர்த்த மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை இரத்துச்செய்ய வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்தும், தமிழகத்தின் உரிமையை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும், மதுரையில் ஓகஸ்ட் 17 ஆம் திகதி வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதெனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG